நான் போன முறை கொடுத்த செய்தியில், இந்த வருடத்தின் விண்வெளி நிகழ்வுகள் பலவற்றை சொல்லி இருந்தேன் ஆனால், அதில் முக்கியமான மற்றும் மிகவும் அரிதான நிகழ்ச்சியான சூரிய கிரகணம் பற்றி சொல்லவில்லை.
இந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ஆம் நாள். இந்த அன்னுலார்(Annular)சூரிய கிரகணம் வர இருக்கிறது.
எப்போதுமே சூரிய கிரகணங்கள் மிகவும் அரிதான ஒரு விஷயம். அது மட்டுமில்லாமல் இதில் மூன்று வகைகள் உள்ளன முதல் வகை முழு சூரிய கிரகணம் அதாவது சூரியனை முழுவதுமாக நிலவானது முறைக்கும்.
அதற்கு அடுத்து, சரிவர மறைக்காமல் இருக்கும் நிகழ்ச்சி, இதனை partial solar eclipse என்பார்கள்,
மூன்றாம் முறை சூரியனை மறைக்கும் ஆனால் சூரியனின் வெளிவட்டப் பகுதி நமக்கு தெரியும். இதை தான் அன்னுலார் என்பார்கள். இது போன்ற ஒரு நிகழ்வுதான் வரும் டிசம்பர் மாதம் வர இருக்கிறது.
ஏன் மிகவும் அரிதான நிகழ்ச்சி
இந்த சூரிய கிரகணங்கள் வருவது மிகவும் அரிது ஏனென்றால் நமது பூமியானது சுற்றக்கூடிய தளத்திற்கும், சந்திரனானது பூமியை சுற்றும் தளத்திற்கும், சற்று வேறுபாடுகள் உள்ளன சரியாக சொல்லவேண்டும் என்றால் 15 டிகிரி சாய்வாக ஒரு தளத்தில் நமது நிலவானது பூமியை சுற்றி வருகிறது. கீழே உள்ள படத்தை பார்க்கவும் .
இதுபோன்ற சுற்றக்கூடிய காலங்களில் வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சூரியன்-சந்திரன்-பூமி போன்றவை சரியான நேர்கோட்டில் வரும். இந்த நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது
வரக்கூடிய காலங்களில், முழுமையாக சூரியனை மறைக்கும் நிகழ்ச்சியை யாரும் பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள் அறிவியலாலர்கள் ஏனென்றால் நமது நிலவானது வருடத்திற்கு 3 சென்டி மீட்டர் என்ற தூரத்தில் விலகிச் சென்று கொண்டே இருக்கிறது.
விலகி செல்வதன் காரணமாக நம்மால் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது எப்போதுமே இந்த அண்ணலார் சூரிய கிரகணங்கள் மட்டுமே நமக்கு தெரியவரும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்
உங்களுக்கு ஒரு கால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தால் அது முழு சூரிய கிரகணத்தை நீங்கள் கண்டிப்பாக பாருங்கள் ஏனென்றால் முன் காலத்தில் தான் அது மிகவும் ஒரு ஆபத்தான விஷயமாக கருதப்பட்டது ஆனால் இந்த காலத்தில் இது ஒரு வானியல் நிகழ்வு என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இது ஒரு அரிதான நிகழ்வு இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முழு சுகத்தை பார்ப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் முழு சூரிய கிரகணம் நிகழாது
மேலும் படிக்க
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?