நாசாவின் அறிவிப்பு:
நான்கு நாட்களுக்கு முன்பு நாசாவானது பத்திரிக்கை சந்திப்பில் போது , கெப்ளர் வின்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்த புதிய கிரகங்கள் சிலவற்றை அறிவிக்க போவதாக கூறியது. அதன் பிறது 2 நாட்கள் கழித்து. நாசாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில். ஒரு நேரலையில் இது அறிவிக்கப்பட்டது.
அதில் நாசா விண்வெளி ஆராய்சி மையமானது. புதிதாக 219 கிரகங்களை நமது கிரகப்பட்டியலில் சேர்த்தது. அதில் உள்ள ஆச்சரியமான விஷயம் என்ன வெண்றால். அந்த 219 கிரகங்களும் எக்சோ பிளானெட் எனப்படும் பூமியை போன்ற தன்மைகள் உடைய கிரகங்கள் என அறிவிப்பு செய்த்து. மேலும் ஒரு ஆச்சரியமான விஷயமாக. அந்த 219 ல் 10 கிரகங்கள் குறிப்பிட்டு அவை ஹாபிடபுள் ஜொன் எனும் ஒரு பகுதியில் இருப்பதாகவும் மேலும் அவை ராக்கி கேர் கொண்ட கிரகம் என்னும். அறிவிப்பு செய்தது.
ராக்கி கோர் என்றால் தரைபகுதி உள்ள கிரகம்
ஹாபிடபுள் ஜொன் என்றால், கிரகத்தில் உள்ள தண்னீரினை திரவ நிலையிலேயே வைக்க உதவும் ஒரு தட்பவெப்ப நிலை
கெப்ளர்:
மேலும் ஒரு அதிகபட்ச தகவலாக இந்த கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக இதுவரை 4034 கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்த 4034 ல் 2000 கிரகங்கள் அதனதன் சூரியனை வலம் வந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் மற்ற கிரகங்கள் என்ன நிலைமை என்று தானே கேட்கிரீர்கள். அவை யெல்லாம் கிரகங்கள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டன ஆனால் அவை அந்த நட்ச்த்திரத்தினை தான் சுற்றுவருகிறதா என இன்னும் கண்டுபிடக்கப்படவில்லை.
கெப்ளர் தொலை நோக்கியானது Cygnus Constellation எனும் பகுதியை உற்று நோக்கி இந்த தகவல்களை சேகரிக்கிறது.
![]() |
| Home Daily Needs @ Amazon Offer |
முறை:
அந்த தொலைநோக்கியானது குறிப்பிட்ட நட்சத்திரத்தினை உற்றிநோக்குமாறு அமைக்கப்படும். மேலும் அந்த நட்சத்திரதிலிருந்து வரும் ஒளியினை அது ஒரு கிராப் அமைப்பில் வைக்கும். ஏதேனும் ஒரு கிரகம் அதனை கடக்குமாயின் . தொலைநோக்கிக்கு வரும் ஒளியின் அளவு சற்று கீழிறங்கும் . இதன் மூலம் தான் விண்வெளி தொலைநோக்கியானது கிரகங்களை கண்டு பிடிக்கிறது.

