அறிவியலாலர்கள் , நமது பால்வழி அண்டத்தின் மையப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்களை நாசாவின் சந்திரா எக்ஸ் ரே விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.

இது ஒரு தொகுப்பை (குழுவை) போன்று கூட்டமாக இருப்பதாகவும். தெரிவித்துள்ளனர்.  இவை அனைத்தும், நட்சத்திர வெகுஜன கருப்பு ஓட்டைகள் வகையை சார்ந்தது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.  சொல்லப்போனால். கருந்துளைகள் மொத்தம் மூன்றுவகைப்படும். (இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.)

இந்த அனைத்து கருந்துளைகளும் ஒன்றுக்கு ஒன்று நமது சூரியனை போன்று5 முதல் 30 மடங்கு அதிக நிறையுடன் இருக்கும். இந்த கருந்துளை தொகுப்பானது நமது Sgr A* (Sagittarius A*) லிருந்து  வெறும் 3 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மூன்று ஒளியாண்டுகள் என்பது விண்வெளியை பொருத்தவரையில் மிகவும் குறுகிய தூரம் தான்.

ஒரு கருந்துளையானது நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் போது அதிலிருந்து வித்தியாசமான  புகையை இழுக்கும் இதனை அறிவியலாலர்கள் X Ray இருமங்கள் அதாவது XRay Binaries என அழைக்கிறார்கள். அந்த X ray புகையானது அதிகப்படியான வெப்பத்திற்கு ஆட்படும் போது அதிலிருந்து X ray கதிர்கள் புறப்படும். இதனை கொண்டுதான். சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கியானது இந்த கருந்துளை தொகுப்பினை கண்டுபிடித்துள்ளது

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *