இந்த NGC 6744 அண்டமானது கிட்டதட்ட 30 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் Spiral கேலக்ஸியாகும். இது விண்வெளியில் தெற்கு பகுதியில் பவோ கூட்டத்தில் உள்ள ஒரு அண்டமாகும் (Southern Constellation PAVO) இந்த அண்டமானது நமது பார்வைக்கு படும் படியில் சற்று சாய்ந்த வண்ணம் உள்ளதால் நம்முடைய ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியால் இதனை கண்டு பிடிக்க முடிந்தது. நீங்கள் இந்த படத்தினை பார்க்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் மையத்தில் ஒரு பிரகாசமான மஞ்சல் அல்லது ஆரஞ்சு கலந்த நிறம் பெரும்ளவில் இருப்பதோடு. அதனை தொடந்து மற்ற நட்சத்திர பகுதிகள் உள்ளன.

இந்த அண்டத்தினை பற்றி அறிவியலாலர்கள் கூறும் போது இது சுமாராக 175,000 ஒளியாண்டு தொலைவு தூரத்தினை அகலமாக கொண்டிருக்கலாம் என கருதுகின்றார்கள். அதாவது ஒரு ஒளியாக இருந்தாலும் இந்த அண்டத்தினை கடந்து செல்ல 175000 ஆண்டுகள் ஆகும் என்பது தான் இதன் பொருள். மேலும் இந்த அண்டத்தில் உள்ள மையப்பகுதியில் சிறிய மற்றும் குளிர்ந்த நட்சத்திரங்களின் கூட்டமைப்பினால் உருவாகி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

மேலும் அதன் மையப்பகுதியில் இருக்கும் பிங்க் நிற கருப்பகுதியானது  நட்சத்திரங்கள் உருவாக்கும் ஸ்டார் ஃபார்மிங்க் பகுதி (Star farming region)எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *