செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் ஆஸ்டிராய்டு பெல்டு என்று சொல்லப்படக்கூடிய விண்கல் பட்டை. இந்த இடத்தில் அதிகமாக ஆஸ்டிராய்டுகள் நமது சூரியனை சுற்றிவருகின்றன.

ஆஸ்டெரொய்ட் 6478 கௌல்ட்(Asteroid (6478) Gault, என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்டிராய்டு. இது 30 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த விண்கல்லானது கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து இது ஒரு வால்மீனை போன்று செயல்பட்டு வருகிறது என்று. வானியல் அறிஞ்சர்கள் கண்டறிந்து உள்ளனர்.

asteroid show comet property
asteroid show comet property

சுமார் 3 கி.மீட்டர் அகலம் கொண்ட இந்த மிகப்பெரிய விண்கல்லில் இருந்து பிரியும் கல் துகள்கள் அல்லது தூசிகள் 400,000 கி.மீட்டர் தூரம் வரையில் பரவி இருப்பதை, தொலைநோக்கி வானியலாலர்கள் சிலர் கண்டறிந்துள்ளனர்.

இந்த விண்கல்லின் வித்தியாசமான இச்செயலானது , அந்த விண்கல் பட்டையில் உள்ள ஏதேனும் ஒரு பொருள் மோதியிருப்பதால் நிகழ்ந்திருக்கலாம். என்று விஞ்சானிகள் கருதுகின்றன.

எப்படி இருந்தாலும் சரி, இந்த விண்கல்லில் இருந்து வெளிப்படும் தூசியானது சுமார் 4000,000 கி.மீட்டர் தொலைவு வரையில் இருக்கிறது. இது நமது பூமியில் இருந்து நிலவு இருக்கும் தூரத்திற்கு சமமானதாகும். இந்த விஷயம் தான் ஆராய்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Source

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *