கழுகு நெபுலா, இதனை மெஸ்ஸியர் 16 என்றும் கூறுவர், மேலும் இதில் தான் இளம் சூரியன்கள் உருவாக்கும் நட்சத்திர தொகுப்பு NGC 6611 உம் இதில் தான் உள்ளது.

மேலும் இதில் நட்சத்திரங்கள் உருவகும் ஒரு பகுதியும் உள்ளது இதனை Pillars of Creation என அழைப்பர். இது அந்த நெபுலாவில் தெற்கு பகுதியில் அமைந்து இருப்பதை பார்க்கலாம்.

இது பூமியில் இருந்த 5700 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது. மேற்காணும் படத்தில் நீங்கள் பார்ப்பதை. நாசா வின் சந்திரா எக்ஸ் ரே அப்சர்வேடரி யின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகளையும், மேலும் ஹப்புல் விண்வெளி தொலைநோக்கி யில் இருந்து பெற்ற தரவுகளின் கலப்பாக தான் இந்த மேற்காணும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மிகையூட்டப்பட்ட வண்ண புகைப்படமானது. அந்த நெபுலாவில் உள்ள உண்மை தன்மையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கியில் பார்த்த போது மிதமான, நடுத்தரமான மற்றும் மிக அதிக X கதிர்களின். வெளிப்பாடு காணப்பட்டத்தையும், இதை முறையே சிகப்பு, பச்சை மற்றும் நீலம், நிறங்களை கொடுத்துள்ளதாகவும். கூறியுள்ளனர்

மேலும் சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கியானது 1700க்கும் மேற்பட்ட x கதிர்களை வெளியிடும் நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளது.

Ref

For more Chandra images, multimedia and related materials, visit:

http://www.nasa.gov/chandra

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *