Indian Space Research Organization . இஸ்ரோ அமைப்பானது. வரும் வருட இறுதிவரை மிகவும் பிஸியான ஒரு காலமாக இருக்கப்போகிறது.

ஆம் நம்முடைய GSAT11 எனும் ஒரு செயற்கைக்கோளை ஏரியன் ஸ்பெஸ் குழுமம் எனும். வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து விண்ணில் ஏவி தருமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு முன்னரே அந்த GSAT-11 செயர்க்கைக்கோள் ஆனது இஸ்ரோவால் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டது. (ஏப்ரல் மாதத்தில்) அதுவும். இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் k.சிவன் . பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல.

இந்த ஆண்டு வரும் செப்பம்பர் மாதம் முதல் இஸ்ரோவுக்கு தொடர் வேலைகள். வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவின் pslv ராக்கெட் ஆனது இரண்டு வெளிநாட்டு செயர்க்கைக்கோள் களை சுமந்து விண்ணில் செலுத்த உள்ளது. அதனை தொடர்ந்து. அக்டோபர் மாதம் இன்னுமொரு PSLV ராக்கெட் ஆனது இந்தியா வுக்கு சொந்தமான ஒரு ரிமோட் சென்சிங் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதோடு பற்பல வெளிநாட்டு செயரகைகோள்களையும் விண்ணில் ஏவ உள்ளது. அதே அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பெரிய ராக்கெட் ஆன(Heaviest rocket) GSLV Mk 3 (640 ton) ஆனது GSAT 29 எனும் இந்திய சாட்டிலைட்டையும். Ka X Ku Multi Beam என்ற செயர்கைகோளையும், மற்றும் சில தொலைத்தொடர்பு செயரகைகோள்களையும் விண்ணில் ஏவ உள்ளது.

இந்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் கிராமப்புற சேவைகளை இண்டர்நெட் உலகத்தில் இணைக்க பயன்படுத்தப்படும். எனவும் கூறியுள்ளார்கள். இதன் ஆங்கிலப்பெயர் VRC village resource center used for connecting rural and city Services

இதை தொடர்ந்து நவம்பர் மாதம் இந்தியாவன் மற்றோரு GSLV mk 2 ராக்கெட் ஆனது. GSAT 7A எனும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது இந்த வகை GSAT 7a வானது இந்திய வான்வெளிப்படைக்காக (indian air force) பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்கள். ஏற்கனவே GSAT 7 மற்றும் ருக்மணி போன்ற செயற்கைக்கோள்களை இஸ்ரோ இந்திய கடல் படைக்காக Indian Navi அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் முன்பு குறிப்பிட்ட GSAT11 செயர்க்கைக்கோள் பற்றி கேட்டதற்கு வருட முடிவுக்குல் அதுவும் ஏறியான் ஸ்பெஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விண்ணில் ஏவப்படும் என்றும் கூறியுள்ளார்.

Source:

year end busy isro

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *